தூய்மை பணியாளர்களுக்கு மூன்று மாத ஊதியம் நிலுவை மாநகராட்சி துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 21 செப்டம்பர், 2026

தூய்மை பணியாளர்களுக்கு மூன்று மாத ஊதியம் நிலுவை மாநகராட்சி துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க !

தூய்மை பணியாளர்களுக்கு மூன்று மாத ஊதியம் நிலுவை மாநகராட்சி துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க !
வேலூர் , செப்டம்பர் 21 -
வேலூர் மாவட்டம் ஒப்பந்த தூய்மை பணி யாளர்களுக்கு 3 மாத ஊதியம் நிலுவை, பிஎஃப் பணம் ஏப்பம்: தூய்மை பணி யாளர்களின் வாழ்க்கையில் விளை யாடும் மாநகராட்சி துறை உயர்பதவி ஊழியர்கள் மாநகராட்சி துறை உயர் பதவி ஊழியர்கள் அலட்சியப் போக்கை கைவிட்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சாக்கடையை சுத்தம் செய்தல் துர்நாற்ற குப்பையை அகற்றுதல் ஒரு நாள் பணி யாக மாநகராட்சி உயர் பதவி ஊழியர்கள் ஈடுபட்டு பணி செய்வார்களா  தூய்மை பணியாளர்களின் நிலைமையை கண்டு அவர்கள் வாழ்க்கையில் விளையாடலா மா தூய்மை பணியாளர்களின் கோரிக் கையை அரசு உடனடியாக நிறைவேற்ற சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்.
வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சி யில் 60 வார்டுகளிலும் மாநகரை தூய் மையாக பராமரிக்கும் பணியில் 1,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணி யாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர் களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என தொழிலாளர் கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், பல மாதங்களாக தொழிலாளர்க ளின் PF தொகையும் முறையாக செலுத் தப்படவில்லை என தெரிவிக்கப் பட்டுள் ளது . தினந்தோறும் குப்பைகளை அகற்றி, பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கும் தூய்மை பணியாளர்களின் ஊதியம் தாமதப்படுத்தப்படுவது அவர் களின் குடும்ப வாழ்வாதாரத்தை பாதிப் பதாக கூறப்படுகிறது. தொழிலாளர்களு க்கு உரிய காலத்தில் ஊதியம் மற்றும் PF தொகையை வழங்க மாநகராட்சி நிர்வா கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்புஉபகரணங்களை யும் முறையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தூய்மை பணி யாளர்களின் கோரிக்கைகளை அலட்சிய மாக அணுகும் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த நிறுவனத்தினர் மீது உரிய விசாரணை நடத்தி, தவறு இருந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக கடந்த வாரம் மாநகராட்சி ஆணையரை சந்தித்து பல்வேறு கோரிக் கைகள் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக் கப்பட்டது. இந்நிலையில், நிலுவை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (21.09.2026) மதியம் 12.30 மணியளவில் வேலூர் மாநகராட்சி அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத் திற்கு வேலூர் மாவட்ட செயலாளர் அ.இளங்கோ, காட்பாடி மாவட்ட செயலா ளர் பிலிப் ஆகியோர் தலைமை வகித்த னர். தூய்மை பணியாளர்களின் உழைப் பை மதித்து, அவர்களுக்கு உரிய ஊதி யம், PF மற்றும் பாதுகாப்பு வசதிகளை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், தொழிலாளர்களின் நலனில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக் கப்பட்டது. மாநகராட்சியை தூய்மையாக வைத்திருக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது நிர்வாகத் தின் முக்கிய பொறுப்பு எனவும் வலி யுறுத்தப்பட்டது. நிலுவையில் உள்ள ஊதியம் மற்றும் PF தொகையை உடன டியாக வழங்கி, தூய்மை பணியாளர் களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் விடு தலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி கமிஷனரிடம் மூன்று மாத சம்பளம் மற்றும் நிலுவையில் உள்ள PF தொகை யை உடனடியாக விடுவிக்க கோரி கோரிக்கை மனு வழங்கப்பட்டது. உடன டியாக கோரிக்கையை நிறைவேற்ற பரிந்துரை செய்யப்படும் என உறுதி யளித்துள்ளனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad