லத்தேரி அருகே ரயில்வே தண்டவாளத் தில் வாலிபர் சடலம் மீட்பு ஜோலார் பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை!
காட்பாடி , செப்டம்பர் 21 -
வேலூர் மாவட்டம், காட்பாடி மற்றும் லத் தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள Down Line ல் செல்லும் தண்ட வாளத்தில் ஆண் சடலம் கிடப்பதாகத் தகவல் கிடைத்தது.தகவலறிந்த கட்பாடி ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) மற்றும் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றினர்.போலீசாரின் விசாரணையில்இறந்தவர் லத்தேரி அருகேயுள்ள ரசூல்பாக்கம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் நந்தீஸ்வரன் (வயது 27) என்பது தெரிய வந்தது.மேலும் அவரிடம் பயணச் சீட்டு எதுவும் இல்லை என்பதும் கண்டறியப் பட்டது.இதையடுத்து அதிகாலை பிரேத பரிசோதனைக்கு உடல் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக் கப்பட் டது.இச்சம்பவம் குறித்து ஜோலார் பேட் டை ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது விபத்து நிகழ்ந்ததா என்பது குறித்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக