பேர்ணாம்பட்டு லயன்ஸ் கிளப் சார்பில் பெண்களுக் கான தையல் பயிற்சி வகுப்பு துவக்க விழா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 20 செப்டம்பர், 2026

பேர்ணாம்பட்டு லயன்ஸ் கிளப் சார்பில் பெண்களுக் கான தையல் பயிற்சி வகுப்பு துவக்க விழா !

பேர்ணாம்பட்டு லயன்ஸ் கிளப் சார்பில் பெண்களுக் கான தையல் பயிற்சி வகுப்பு துவக்க விழா !
பேரணாம்பட்டு , செப்டம்பர் 20 -
               வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு
லயன்ஸ் கிளப், தேவநாயகி கல்வி நிறு வனங்கள் மற்றும் டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை ஆகியோர் இணை ந்து பெண்களுக்கான தையல் பயிற்சி வகுப்பு துவக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இவ்விழாவிற்கு, பேர்ணாம்பட்டு லயன்ஸ் கிளப் தலைவர் பரிதா புரு ஷோத்தமன் தலைமை தாங்கினார் செய லாளர் சசிகுமார் அனைவரையும் வர வேற்றார் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் கள்முஹம்மது இம்ரான், வெற்றி பைனா ன்ஸ் பாரத், மலர் விஜயசாந்த், இயக்குநர் சுபாகரன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். விழாவில் டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை தலைவர் ஆசிரியர் பெ.செளந்தரபாண்டியன், தேவநாயகி கல்வி நிறுவன இயக்குநர் நரேந்திர குமார், கிரீன்வேலி சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக் பள்ளி தலைவர் ஜாவித் கான் ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து பேசி னார்கள். இதில் பேர்ணாம்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதியில் இருந்து 60க்கும் மேற்பட்ட பெண்கள் வந்திருந் தனர். பயிற்சியில் பெண்களுக்கு தை யல், ஆரி வெர்க், அழகு கலை உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளிக்கப் பட்டு இறுதி யில் சான்றிதழ் வழங்கப்படும். விழாவில், மாவட்ட தலைவர் டாக்டர் பிலால் நத்தார், தொழில் அதிபர் இராஜசேகரன், முதல் நிலை தலைவர் ஆசிரியர் தமிழரசன், இணை செயலாளர் வினோத் பாபு, ஒருங்கிணைப்பாளர் பிச்சைமுத்து, இயக்குநர் பாடகர் குமார், நிர்வாகிகள் டில்லி பாபு, திவாகர், முஹம்மது உசேன் உட்பட பலர் பங்கேற்றனர் முடிவில், லயன்ஸ் கிளப் பொருளாளர் ரமணி ராஜசேகரன் நன்றி கூறினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad