ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 19 செப்டம்பர், 2026

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (19.09.2026), ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்தும் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் வளரும் பாரதம் – கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதித்திட்டத்தின்கீழ் (VB – GRAM (G) 2026 – 2027) குறித்தும், புதிய குளம், கால்வாய்கள் தூர்வாருதல், கால்நடைகள் மேய்ச்சல் நிலங்கள், ஜல் ஜீவன் மிஷன் திட்டப்பணிகள் குறித்தும், பசுமை ஊரகம் பகுதி – III – 2024 நாற்றங்கால் பண்ணை குறித்தும், யுக்தாரா (Yuktdhara) இணையதளத்தில் ஊரக வளர்ச்சிப் பணிகள் பதிவேற்றம் நிலைகள் குறித்தும், கலைஞரின் கனவு இல்லம் 2025-2026 திட்டப்பணிகள் குறித்தும், 

முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டப்பணிகள் குறித்தும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டப்பணிகள் (2024 -25) குறித்தும், நீலப்புரட்சி திட்டப்பணிகள் குறித்தும் (மீன் உற்பத்தி மற்றும் மீன்வளத்துறையை மேம்படுத்துதல்), இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையம் பகுதி – III திட்டப்பணிகள் குறித்தும், பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டப்பணிகள் குறித்தும், 

முதலமைச்சரின் கிராம சாலைls மேம்பாட்டுத் திட்டம் – பகுதி II (2025 -26) திட்டப்பணிகள் குறித்தும், நபார்டு XXXI – 2025 – 26 திட்டப்பணிகள் குறித்தும், மூலதன முதலீட்டிற்கான மாநிலங்களுக்கான சிறப்பு உதவித் திட்டம் 2025 -26 திட்டப்பணிகள் குறித்தும், கிராமப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி குறித்தும், 

கிராமப்புற சாலைகளின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டப்பணிகள் குறித்தும், பள்ளிகளில் கட்டப்படும் சுகாதார வளாக திட்டப்பணிகள் 2025 -26 குறித்தும், சமூக சுகாதார வளாகம் திட்டப்பணிகள் குறித்தும், தூய்மை இந்தியா இயக்கம் (கிராமப்புறம்) குறித்தும், 

தூய்மை தமிழகம் செயலியின் முன்னேற்ற பணிகள் குறித்தும், மேலும் சத்துணவு திட்டத்தின்கீழ் (2025-2026) புதிய சமையல் அறையுடன் வைப்பறைகளுக்கான கட்டட பணிகள் மேற்கொண்டுள்ள விவரங்கள் குறித்தும், காலை உணவுத்திட்டம் விரிவாக்கப் பணிகளுக்கான, 

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி புதிய சமையல் அறையுடன் வைப்பறைகளுக்கான கட்டட பணிகள் மேற்கொண்டுள்ள விவரங்கள் குறித்தும், சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கான மேற்கொண்டுள்ள விவரங்கள் குறித்தும், 

இயற்கை பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மேற்கொண்டுள்ள பணிகளின் விவரங்கள் குறித்தும், மாவட்ட கனிம வள நிதியினகீழ் 
மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டப்பணிகள் குறித்தும், மேலும் திடக்கழிவு மேலாண்மை போன்ற பல்வேறு திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு மேற்கொண்டார்.
 
இந்த ஆய்வுக்கூட்டத்தில் இணை இயக்குநர் / திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை நா.சரவணன், செயற்பொறியாளர் இளஞ்சேரன் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad