தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிய வீடு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 19 செப்டம்பர், 2026

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிய வீடு.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்

திருநெல்வேலி கோட்டம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி தாலூகா மாப்பிள்ளையூரணி கிராமம், வ.உ.சி நகர் திட்டப்பகுதியில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 528(G+2) அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது.
       
ஒரு குடியிருப்பின் பரப்பளவு 408 சதுர அடி ஆகும். இதில் படுக்கையறை, வசிப்பறை, சமையலறை, குளியலறை மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும் திட்டபகுதியினுள் குடிநீர், கழிவுநீர் வெளியேற்றுதல், தெரு விளக்குகள் மற்றும் தார்சாலை போன்ற அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. 

ஒரு வீட்டின் மொத்த மதிப்பு ரூ.12,15,314/-. இதில் மாநில அரசின் மானியத் தொகை ரூ.7,00,000/-, ஒன்றிய அரசின் மானியத் தொகை ரூ.1,50,000/-. மீதமுள்ள தொகை ரூ.3,65,314/- ஒரு வீட்டிற்குரிய பங்களிப்புத் தொகையாக பயனாளி வாரியத்திற்கு செலுத்த வேண்டும்.

தகுதிகள் : பயனாளிக்கு இந்தியாவின் எந்த பகுதியிலும் சொந்த நிலமோ, வீடோ இருத்தல் கூடாது.

பயனாளியின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
வருவாய் அலுவலர்கள் மூலம் ஸ்தல ஆய்வு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் பெறப்பட்டவுடன், பயனாளி பங்களிப்புத் தொகை ரூ.3,65,314/- ஐ வங்கி வரைவோலையாக பெற்று திருநெல்வேலி கோட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
      
உதவி நிர்வாகப் பொறியாளர் அலுவலகம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், தூத்துக்குடி உப கோட்டம், பழைய தாலூகா அலுவலக வளாகம், மத்திய காவல் நிலையம் அருகில், தூத்துக்குடி – 628 001, செல் : 9865957820 என்ற முகவரிக்கு வீடு ஒதுக்கீடு பெற தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad