குடியாத்தம் சட்டமன்றத் தொகுதயில் இரவு நேரங்களில். சீரான மின்சாரம் வழங்க அப்பகுதி மக்கள் கோரிக்கை !
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஏரிகுத்தி, எருக்கம்பட்டு, பத்தலப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில், இரவு நேரங்களில் தொடர் ந்து மின்சாரம் துண்டிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள் ளனர்.குறிப்பாக, இரவு 11 மணி அளவில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவ தால், பொதுமக்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.தொடர்ச்சி யாக இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதற்கான காரணம் குறித்து மின்சாரத்துறை அதிகாரிகள் உரிய விளக்கம் அளிப்பதுடன், இதுபோன்ற மின்தடை ஏற்படாமல் உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், மின்வெட்டு பிரச்சினை தொடர்ந்து நீடித்தால், அகில இந்திய மக்கள் மனிதநேய கழகத்தின் சார்பில் மின்சாரத்துறை அதிகாரிகளை கண்டி த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, அக்கழகத்தின் மாநில செயலாளர் அங்காளன் தெரிவித்துள்ளார்.மேலும், பேர்ணாம்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்படும் தொடர் மின்வெட்டு பிரச்சினையை மின்சாரத்துறை அதி காரிகள் உடனடியாக கவனத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள் ளார்கள்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக