ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் வழுக்கு மரம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் வழுக்கு மரம்.

ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் வழுக்கு மரம். 

ஸ்ரீவைகுண்டம், செப்டம்பர் 6. தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் ஒன்றாவதான ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு வழுக்கு மரம் நடந்தது. 

காலை 7 மணிக்கு விஸ்வரூபம்.9 மணிக்கு திருமஞ்சனம். 10 மணிக்கு நித்தியல். மாலை 5 மணிக்கு சாயரட்சை. 7 மணிக்கு உற்சவர் கள்ளப்பிரான் ஸ்ரீ தேவி பூதேவி தாயார்களுடன் அலங்காரம் செய்யப்பட்டு கோவில் வாசல் முன் எழுந்தருளினார். 

வழுக்கு மரம் எண்ணெய் தடவப்பட்டு தயார் நிலையில் இருந்தது. சிறுவர்கள் வழுக்கு மரம் ஏறி முயற்சி செய்தனர். கடைசியில் ஒரு சிறுவன் ஏறி அதிலிருந்த பலகாரம் மற்றும் பரிசு படம் ஆகியவற்றை எடுத்து கொண்டார்கள். பின்னர் பெருமாள் ரதவீதி சுற்றி கோவில் வந்தார். 

இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஷ். வாசு. நாராயணன். ராமானுஜம். சீனு. ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி சீனிவாசன் தேவராஜன் சீனிவாசன். திருவேங்கட த்தான் நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் 

அறங்காவலர் குழுத் தலைவர் அருணா தேவி கொம்பையா உறுப்பினர்கள் மாரியம்மாள் சண்முகசுந்தரம் பேக்கிரி முருகன் முத்துகிருஷ்ணன் பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad