பொது மக்களுக்கும் இடையூறாக செயல் படும் கல் குவாரியை இழுத்து மூடக்கோரி வி.சி.க.,வினர் துண்டு பிரசுரங்கள் விநி யோகம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 செப்டம்பர், 2026

பொது மக்களுக்கும் இடையூறாக செயல் படும் கல் குவாரியை இழுத்து மூடக்கோரி வி.சி.க.,வினர் துண்டு பிரசுரங்கள் விநி யோகம்!

பொது மக்களுக்கும் இடையூறாக செயல் படும் கல் குவாரியை இழுத்து மூடக்கோரி வி.சி.க.,வினர் துண்டு பிரசுரங்கள் விநி யோகம்! 
செய்யாறு, செப்டம்பர் 10-
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே  பள்ளி மாணவர்களுக்கும் -பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் கல்குவாரி யை மூட வேண்டும் என, விடுதலை சிறுத் தைகள் கட்சி சார்பில் கிராம மக்களுக்கு கவன ஈர்ப்பு துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர். 
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்துள்ளது மேனல்லூர் கிராமம். இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியும், அரசு மேல் நிலைப் பள்ளியும் இயங்கி வருகிறது. இந்த கிராம எல்லையில் பொண்ணம்பலம் என்ற பெயரில் கல் குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரி யில் அரசு நிர்ணயத்துள்ள அளவைவிட கூடுதலாக கனிமங்களை வெட்டி எடுத்து கொள்ளையடித்து வருவதாக தொடர் புகார்கள் எழுந்து வருகிறது. 
ஆனால், இந்த குவாரியின் உரிமையாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை 'கவனித்து விடுவதால்' நடவடிக்கை எடுக்கவேண்டிய அதிகாரிகள் 'மௌனம் சாதித்து' வருகின் றனர்.மேனல்லூர் ஊராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரியை குவாரி உரிமையாளர் முறைப்படி செலுத்தாமல் 'போலி பில் களை' வைத்து மாவட்ட நிர்வாகத்திற்கு 'பொய்க் கணக்கை' காட்டி வருகின்றார். 
இதற்கு 'முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் செய்யாறு மற்றும் வெம் பாக்கம் பகுதிகளைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் ஆ.மதியழகன் தலைமையில் ஒன்றிணைந்துள்ளனர் இவர்கள் சம்பந் தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து புகார் மனுக்களை கொடுத்துள்ளனர். இது தவிர மேற்கண்ட கல்குவாரியில் இருந்து கனிமங்களை எடுத்து செல்லப்படும் கனரக வாகனங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவர்கள், கிராம மக்களை நேரில் சந்தித்து கவன ஈர்ப்பு துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.அந்தத் துண்டு பிரசுரங்க ளில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வரு மாறு; 'இரவு பகல் என, 24 மணி நேரமும் இந்த கல்குவாரியில் 'வெடி வைத்து கனி மத்தை சுரண்டுவதால்' இங்குள்ள விளை நிலங்களில் மண் படிந்து பயிர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கால்நடை களும் மேய்ச்சலுக்கு செல்ல முடியாத அளவுக்கு இங்குள்ள புல், பூண்டுஎல்லாம் மண் படிந்து காணப்படுகின்றன. இது தவிர குவாரியை ஒட்டி உள்ள 60 சென்ட் அரசு புறம்போக்கு நிலத்தையும் இந்த கல்குவாரி உரிமையாளர் ஆக்கிரமித்துள் ளார்.  இந்த குவாரியில் இருந்து கனிமங் களை ஏற்றிச் செல்ல அரசு வழிகாட்டிய பாதையில் செல்லாமல், இதன் கனரக வாகனங்கள் குறுக்கு வழியான மேனல் லூர் கிராமம், கிரிஜெயபுரம், சேனியநல் லூர், கணிகிலுப்பை, பல்லாவரம் வழி யாகச் செல்வதால் பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் கடும் சிரமங்களுக்கு உள் ளாகி வருகின்றனர். மேற்கண்ட மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு தினம் தினம் இடையூறு ஏற்படுத்தி வரும் மேற்கண்ட கல்குவாரியை, தமிழகத்தில் புதியதாக பொறுப்பற்றுள்ள த.வெ.க., அரசு நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். இந்த கல் குவாரி யை அரசு விதிகள் படி நிரந்தரமாக மூட வேண்டும், இல்லை என்றால் எங்களது அடுத்த கட்ட போராட்டம் வருகிற 22ஆம் தேதி வெம்பாக்கம் தாசில்தார் அலுவல கம் முன்பு நடத்துவோம்'. இவ்வாறு அந்த கவன ஈர்ப்பு துண்டு பிரசுரங்களில் கூறப் பட்டுள்ளது. இந்த துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மு.கோபி கண்ணன், மாவட்ட துணை செயலாளர் பெருமாள் மாதவ மணிகண்டன், செய் யாறு நகர செயலாளர் அ.லோகு,  மேனல் லூர் ஜோதி மற்றும் பொறுப்பாளர்களான அன்பு, அய்யப்பன், அறிவுடை நம்பி, சிலம்பரசன், சிரஞ்சீவி, வினோத்குமார், சரத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவனம் இனை ஆசிரியர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad