ஸ்ரீவைகுண்டம் செப்டம்பர் 10 தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் இரண்டாவதான நத்தம் விஜயாசனப் பெருமாள் கோயில் பௌத்திரோத்சவம் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது.
கடைசி நாளான இன்று காலை 6 மணிக்கு விஸ்வரூபம். 8 மணிக்கு திருமஞ்சனம். உற்சவர் எம் இடர் கடிவான் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் சயன குறட்டிற்கு எழுந்தருளினார்.
9 மணிக்கு ஹோமம் ஆரம்பிக்கப்பட்டது. 10 மணிக்கு நாலாயிர திவ்வியப் பிரபந்தம் அத்யாபகர்கள் சீனிவாசன். சம்பத் . மதுரகவி. பெரிய திருவடி ஆகியோர் சேவித்தனர். 12 மணிக்கு பூர்ணா குதி நடந்தது. 12. 45 மணிக்கு சாத்து முறை கோஷ்டி. தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மாலை 5 மணிக்கு சாயரட்சை. 6 மணிக்கு உற்சவர் எம் இடர் கடிவான் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் பல்லக்கில் எழுந்தருளி உட்பிரகாரம் சுற்றி வந்தது. பின்னர் பௌத்திர மாலைகள் படிகளையப்பட்டு அட்சதை ஆசீர்வாதங்கள் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் கோபாலகிருஷ்ணன். கண்ணன். ஸ்தலங்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி. சீனிவாசன். தேவராஜன். நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் அறங்காவலர் குழுத் தலைவர் அருணா தேவி கொம்பையா
உறுப்பினர்கள் மாரியம்மாள் சண்முகசுந்தரம் பேக்கிரி முருகன் முத்துகிருஷ்ணன் பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக