ஆம்பூரில் 1 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழை – பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்ததால் பரபரப்பு!
வாணியம்பாடி, அக்டோபர் 17-
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளானகன்னி காபுரம், பச்சகுப்பம், மாதனூர், சான்றோர் குப்பம், தேவலாபுரம், சோலூர், ஆலாங் குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.இதன் காரணமாக ஆம்பூர் நேதாஜி சாலை, நகராட்சி அலு வலகம் எதிரே மற்றும் ரெட்டித்தோப்பு செல்லும் ரயில்வே பாலத்தின்அடிப்பகுதி உள்ளிட்ட இடங்களில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து சாலைகளில் தேங்கியது. இதனால் அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
மேலும், பல்வேறு பணிகளுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய பெண்களும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று திரும் பிய மாணவர்களும் சாலைகளில் தேங் கிய தண்ணீரைக் கடந்து செல்ல முடியா மல் அவதிக்குள்ளாகினர்.இதற்கிடையே, ஆம்பூரில் பெய்த கனமழையால் ரயில் நிலையம் அருகே, சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலை யில் செயல்பட்டு வரும் பாரத் பெட்ரோல் பங்கின் மேற்கூரை திடீரெனச் சரிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அப்போது பெட்ரோல் பங்க் ஊழியர்களும் அங்கிரு ந்த வாகன ஓட்டிகளும் வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாகஉயிர்ச்சேதம் தவிர்க்கப் பட்டது.தொடர்ந்து பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவனம் இனை ஆசிரியர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக