மொரிசப் பல்லி லண்டன் பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம் !
100 பேர் பங்கேற்பு – 25 பேர் கண் சிகிச் சைக்குத் தேர்வு !
குடியாத்தம், அக்டோபர் 12 -
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த மொரிசப்பல்லி லண்டன்பட்டி கிராமத் தில், தமிழ் கிளினிக், மாவட்ட பார்வை இழப்புத் தடுப்புச் சங்கம் மற்றும் சென் னை டாக்டர் அகர்வால் கண் ஆராய்ச்சி மையம் மற்றும் அறக்கட்டளை இணை ந்து இலவச கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாமை நடத்தின.
இந்த முகாமில் பொது நல மருத்துவர்கள் டாக்டர் தமிழ்ச்செல்வம், டாக்டர் பால சந்தர், டாக்டர் பிரசன்னா வெங்கடேஷ், டாக்டர் சங்கரரமணன் ஆகியோர் பங் கேற்று பொதுமக்களுக்குப் பரிசோதனை கள் மேற்கொண்டனர்.முகாமில் மொத்தம் 100 பேர் கலந்து கொண்டு கண் பரிசோத னை மற்றும் மருத்துவ ஆலோசனை களைப் பெற்றனர். இதில் கண் தொடர் பான பாதிப்புகளுக்குக் கூடுதல் சிகிச்சை தேவைப்பட்ட 25 பேர் கண் சிகிச்சைக்கா கத் தேர்வு செய்யப்பட்டனர். கிட்டப் பார்வை, தூரப்பார்வை, கண்புரை, கண் ணில் சதை வளர்ச்சி உள்ளிட்ட கண் பாதிப்புகளுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், தொடர்ச்சி யான தலைவலி உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கும் மருத்துவ ஆலோச னைகள் வழங்கப்பட்டன. முகாம் ஒருங்கி ணைப்பாளர் குடியாத்தம் சதீஷ்குமார் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்து வக் குழுவினர் முகாமில் பணியாற்றினர். ஓய்வுபெற்ற ஆசிரியர் முனிசாமி நிகழ்ச் சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
கிராமப்புற மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை வழங்கிய இந்த முகாம் அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக