குடியாத்தத்தில் மாநில அளவிலான 52-வது ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு !
38 மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்பு – வெற்றி பெற்ற வீரர்களுக் குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டு
வேலூர் அக்டோபர் 12 -
வேலூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில், தமிழ்நாடு மாநில அளவிலான 52-வது ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் குடியாத்தத்தில் அக்டோபர் 9, 10, 11 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் நடைபெற்றன. இதில் தமிழகத்தின் 38 மாவட்டங்களைச் சேர்ந்த கபடி அணிகள் பங்கேற்றன.இப்போட்டிகளுக்கு வேலூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகத் தலைவர் பிரபாகரன் என்ற சீவூர் சேட்டு தலைமை வகித்தார். கழகச் செயலாளர் இராசி தலித் குமார் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு. தமிழரசன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, போட்டிகளில் பங்கேற்ற கபடி வீரர்களைப் பாராட்டி வாழ்த்திப் பேசினார்.குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் சிந்து அழகப்பன், கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் தென்றல்குமார் ஆகியோரும் கலந்து கொண்டு வீரர்களைப் பாராட்டினர்.
வேலூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகத் துணைத் தலைவர் செ.கு. வெங்கடேசன், தமிழ்நாடு கபடி நடுவர் குழு ஒருங்கி ணைப்பாளர் கோபாலன் ஆகியோர் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புரையாற்றினர். மூன்று நாட்கள் நடைபெற்ற இப்போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் மற்றும் வீரர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழகத்தின் 38 மாவட்டங்களைச் சேர்ந்த இளம் வீரர் கள் தங்களது விளையாட்டுத் திறன், உடல் வலிமை, குழு ஒருங்கிணைப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அமெச்சூர் கபடி கழக நிர்வாகிகள், துணைத் தலைவர்கள், நடுவர் குழு உறுப்பினர்கள், மருத்துவர் கள், செவிலியர்கள் மற்றும் காவல்துறை யினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இளம் வீரர்களின் திறமைகளை வெளிக் கொணரவும், கபடி விளையாட்டை ஊக்கு விக்கவும் இப்போட்டிகள் சிறந்த வாய்ப் பாக அமைந்தன.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக