சபரிவர்மன் கொலை வழக்கு:1,200 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 12 அக்டோபர், 2026

சபரிவர்மன் கொலை வழக்கு:1,200 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்.

சபரிவர்மன் கொலை வழக்கு:1,200 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் 
 
நாகர்கோவில் சிறையில் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் நாகர்கோவில் கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 1,200 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

சாமிதோப்பை அடுத்த ஈத்தங்காட்டை சேர்ந்தவர் சபரி வர்மன் ( 34). மாற்றுத்திறனாளியான இவர் வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வந்தார். அவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்ததாக கடந்த ஜூலை மாதம் 9-ந்தேதி தென்தாமரைக்குளம் போலீசார் கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். 

13-ந்தேதி சபரிவர்மன் சிறையில் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 3 வார்டன்கள், 8 கைதிகள் என மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டனர். 

சபரி வர்மன் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்ட நிலையில். நாகர்கோவில் கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 1,200 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்‌.நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad