திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் அடுத்த சி.ம. புதூர் கிளை நூலகம் சார்பில், கிழங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இளம் வாசிப்பு மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் பெ. சரவணன் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ப. சக்ரவர்த்தி முன்னிலை வகித்தார். சி.ம. புதூர் கிளை நூலகர் ஜா. தமீம் இளம் வாசிப்பு மன்றத்தைத் தொடங்கி வைத்து, மாணவர்களிடையே வாசிப்பு விழிப்புணர்வு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், மாணவர்கள் பள்ளி விடுமுறை நாட்களில் தங்கள் அருகில் உள்ள சி.ம. புதூர் கிளை நூலகத்திற்குச் சென்று குழந்தைகளுக்கான புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். சிறுவயதிலிருந்தே நூலகத்திற்குச் சென்று புத்தகங்களை வாசிப்பதன் மூலம் அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டு, பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்க முடியும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலும், புத்தகங்கள் மூலம் அறிவை வளர்த்துக்கொள்ளும் நோக்கிலும் இந்த இளம் வாசிப்பு மன்றம் தொடங்கப்பட்டது.
கோ.பாபு
திருவண்ணாமலை
மாவட்ட செய்தியாளர்
9843780102
வி.ஜெகன்
திருவண்ணாமலை மாவட்டம் ஒளிப்பதிவாளர்
9894381487
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக