யுபிஐ பரிவர்த்தனைக் கட்டணத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி குடியாத்தத் தில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 12 அக்டோபர், 2026

யுபிஐ பரிவர்த்தனைக் கட்டணத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி குடியாத்தத் தில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் !

யுபிஐ பரிவர்த்தனைக் கட்டணத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி குடியாத்தத் தில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் !
குடியாத்தம், அக்டோபர் 12 -
வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் யுபிஐ பரிவர்த்தனைக் கட்டணத்தை உடனடி யாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உள்ளிட்ட வணிகர் சங்கங்களின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு குடியாத்தம் வியாபாரிகள் சங்கத் தலைவர் அய்யா சாமி, குடியாத்தம் வணிகர் சங்கத் தலை வர் கிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். சங்கச் செயலாளரும், தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப் பின் வேலூர் மாவட்டத் துணைச் செயலா ளருமான கருணாகரன், இணைச் செய லாளர் ராஜேந்திரன், கௌரவத் தலைவர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். பொதுமக்கள் வாங்கும் பொருட் களின் விலையேற்றத்துக்கு வழிவகுக் கக்கூடிய யுபிஐ பரிவர்த்தனைக் கட்ட ணத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத் தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் குடியாத்தம் ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவர் முல்லை சுந்தரேசன், குடியாத்தம் வியாபாரிகள் சங்கப் பொரு ளாளர் வரதராஜன், காய்கறிக் கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜாவித், குடியாத்தம் வியாபாரிகள் சங்கத் துணைச் செயலாளர் பாஸ்கரன், குண மதி உள்ளிட்ட ஏராளமான வியாபாரி கள் கலந்து கொண்டனர்.

கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad