இருமரம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் பொதுமக்கள் தங்களது குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 3 அக்டோபர், 2026

இருமரம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் பொதுமக்கள் தங்களது குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.


திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், இருமரம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் இருமரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்களது அன்றாட தேவைகள் மற்றும் கிராமத்தின் அடிப்படை வசதிகள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் மற்றும் குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
குறிப்பாக, பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், குடிநீர் உள்ளிட்ட அன்றாட தேவைகள் மற்றும் கிராமத்தில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பொதுமக்கள் தெரிவித்த கோரிக்கைகளை அதிகாரிகள் கேட்டறிந்து, சம்பந்தப்பட்ட துறைகளின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.
கிராம மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து, அவற்றிற்கு தீர்வு காணும் வகையில் நடைபெற்ற இந்த கிராம சபை கூட்டம் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது.

கோ.பாபு
திருவண்ணாமலை
மாவட்ட செய்தியாளர்
9843780102

வி.ஜெகன் 
திருவண்ணாமலை மாவட்டம் ஒளிப்பதிவாளர் 
9894381487

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad