மதுராந்தகம் தொகுதியில் விஜய் சாலை வழிப் பிரச்சாரம் கீழாமூர், ஓரத்தூரில் திரண்ட தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 3 அக்டோபர், 2026

மதுராந்தகம் தொகுதியில் விஜய் சாலை வழிப் பிரச்சாரம் கீழாமூர், ஓரத்தூரில் திரண்ட தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்.


மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, மரகதம் குமரவேலை ஆதரித்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தமிழக முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் அவர்கள் மதுராந்தகம் தொகுதிக்கு வருகை தந்து, சாலை வழியாகப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதனை முன்னிட்டு, பூத் எண்கள் 150 மற்றும் 151-க்கு உட்பட்ட கீழாமூர் மற்றும் ஓரத்தூர் ஊராட்சிகளில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் செய்யாறு தொகுதி கழக நிர்வாகியுமான தூசி K. மோகன் அவர்கள் தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் கலை நிகழ்ச்சிகள், மேள வாத்தியங்கள், பேண்ட் வாத்தியங்கள், மெல்லிசை நிகழ்ச்சி மற்றும் தெருக்கூத்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து, கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் செய்யாறு தொகுதியைச் சேர்ந்த கழக நிர்வாகிகள், பூத் பொறுப்பாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் அணியினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒன்றியச் செயலாளர்கள் S.பாரதி, N.விநாயகம், S.K.முகுந்தன், V.ராகவன், M.சதீஷ், M.சுந்தர், S.சந்தோஷ், B.தினேஷ்.

மாவட்டப் பொறுப்பாளர்கள்:
E. பாரதி, SKM மணிகண்டன், பிரபு. மகளிர் அணி நிர்வாகிகள் லட்சுமி, துளசி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுராந்தகம் தொகுதியில் நடைபெற்ற இந்தப் பிரச்சார நிகழ்ச்சியை முன்னிட்டு, கீழாமூர் மற்றும் ஓரத்தூர் பகுதிகளில் கட்சியினர் திரளாகக் கூடியிருந்தனர்.

கோ.பாபு
திருவண்ணாமலை
மாவட்ட செய்தியாளர்
9843780102

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad