திருவண்ணாமலையில் ‘வெற்றி பயணம்’ திட்டப் பேருந்துகள் பயன்பாட்டிற்கு தொடக்கம் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் கொடியசைத்து தொடங்கி வைத்தார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 2 அக்டோபர், 2026

திருவண்ணாமலையில் ‘வெற்றி பயணம்’ திட்டப் பேருந்துகள் பயன்பாட்டிற்கு தொடக்கம் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று சென்னையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், தமிழ்நாட்டின் மதிப்பிற்குரிய மகளிர்கள் அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில் ‘வெற்றி பயணம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, திருவண்ணாமலை மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் அவர்கள் ‘வெற்றி பயணம்’ திட்டத்தின் கீழ் இயக்கப்படவுள்ள பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழக மகளிரின் அன்றாடப் பயணச் செலவைக் குறைத்து, அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், சுயசார்புக்கும் வழிவகுக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

முதலமைச்சரால் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டம், திருவண்ணாமலை மாவட்டத்திலும் நடைமுறைக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, மகளிர்கள் மகிழ்ச்சியுடன் இத்திட்டத்தின் மூலம் பயனடையும் வகையில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இந்நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கோ.பாபு
திருவண்ணாமலை
மாவட்ட செய்தியாளர்
9843780102

வி.ஜெகன் 
திருவண்ணாமலை மாவட்டம் ஒளிப்பதிவாளர் 
9894381487

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad