வாணி வித்யா பள்ளி சாலை குண்டும் குழியுமாக் கிடக்கும் அவல நிலை அதிகாரிகள் கண்டும் காணாமல் அலட்சியம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 17 அக்டோபர், 2026

வாணி வித்யா பள்ளி சாலை குண்டும் குழியுமாக் கிடக்கும் அவல நிலை அதிகாரிகள் கண்டும் காணாமல் அலட்சியம் !

வாணி வித்யா பள்ளி சாலை குண்டும் குழியுமாக் கிடக்கும் அவல நிலை
 அதிகாரிகள்  கண்டும் காணாமல் அலட்சியம் !
காட்பாடி , அக்டோபர் 17 -
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் உள்ள வாணி வித்யா பள்ளி செல்லும் பிரதான சாலை, நீண்ட நாட்களாகப் பராமரிக்கப்படாமல் குண்டும் குழியு மாகக் காட்சியளிக்கிறது. அரைை குறை யாகப் போடப்பட்ட தார்ச்சாலை யால், வாகன ஓட்டிகள், குறிப்பாக பள்ளி வாக னங்கள் மற்றும் இருசக்கர வாகனங் களில் செல்வோர் பெரும் விபத்துகளைச் சந்தித்து வருகின்றனர். இப்பகுதியைக் கடந்து பல உயர் அதிகாரிகள் தினசரி பயணித்தாலும், சாலையைச் சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில் லை. முதியவர்களும், பள்ளிச் செல்லும் குழந்தைகளும் சேறும் சகதியுமான இந்தச் சாலையில் நடமாடவே அஞ்சும் அவல நிலை நிலவுகிறது.
உடனடியாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி ஆணையர் தலையி ட்டு, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சாலையை முழு மையாகச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வலர் கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad