பொன்னையாற்றில் ஆந்திர நபர்கள் மணல் கொள்ளை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை !
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, பொன்னையாற்றில் பொன்னை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒட்டனேரி, பாலேங்குப்பம் கிராமங்களுக்கிடையே உள்ள பொன்னையாற்றில் ஆந்திரா மா நிலத்தைச் சேர்ந்த மர்ம நபர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் 10க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் திருட்டுத்தனமாக தமிழக பொன்னை ஆற்றில் இருந்து தொடர் மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது. மேலும் மணல் திருட் டில் ஈடுபடுபவர்கள் குவியல் குவியலாக மாநில எல்லை பகுதியில் குவிக்கப்பட்டு விற்பனை செய்து வருவதாக கூறப் படுகின்றது
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக