கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் சமூக நலப் பணிகளை முன்னெடுத்து வரும் உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கம் மற்றும் ஜோதி ஆட்டோமொபைல்ஸ் இணைந்து, அரசு மருத்துவமனை அருகே அமைந்துள்ள விவேகானந்தர் ஆட்டோ சங்க நிர்வாகிகளின் ஓய்வறை பகுதியில் இரண்டு சோலார் விளக்குகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆட்டோ ஓட்டுநர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் ஓய்வறை பகுதியில் போதிய வெளிச்சம் கிடைக்கும் வகையில் சோலார் விளக்குகள் வழங்கப்பட்ட இந்நிகழ்ச்சி சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
இந்நிகழ்ச்சிக்கு ஜோதி ஆட்டோமொபைல்ஸ் உரிமையாளரும், ரோட்டரி சங்கத்தின் வருங்காலத் தலைவருமான சாமிநாதன் வரவேற்புரை வழங்கினார். ரோட்டரி சங்கத்தின் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
உளுந்தூர்பேட்டை போக்குவரத்துப் பிரிவு உதவி ஆய்வாளர் மணிவண்ணன், ரோட்டரி சங்கத்தின் முன்னாள் துணை ஆளுநர்களான வழக்கறிஞர் திலீப் மற்றும் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர்களான மோகன்ராஜ், ரமேஷ்பாபு, வெங்கடாஜலபதி, முன்னாள் செயலாளர்களான முத்துக்குமாரசாமி, ஜெகதீஷ் மற்றும் விவேகானந்தர் ஆட்டோ சங்கத்தின் கௌரவத் தலைவர் கமல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், ஆட்டோ சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
பொதுமக்களுக்கும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பயனளிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய சமூக நலப் பணிகள், சமூகத்தில் சேவை மனப்பான்மையை வளர்ப்பதோடு, அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக