வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை - சங்கராபுரத்தில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 16 அக்டோபர், 2026

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை - சங்கராபுரத்தில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைப்பு.


வடகிழக்குப் பருவமழைக் காலம் தொடங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய உள்ளதால் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் அழகுராஜா தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உடனடியாக அணைகள் அமைக்கவும், தாழ்வான பகுதிகளில் நீர் தேங்குவதை தடுக்கவும் தேவையான மணல் மூட்டைகள், ஜே.சி.பி. இயந்திரங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் பருவமழை காலத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து அதிகாரிகளுக்கும், ஊராட்சி செயலர்களுக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர் அழகுராஜா அறிவுரை கூறி விளக்கம் அளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad