பஞ்சமி நிலங்களை மீட்டு ஏழை மக்களு க்கு வழங்கக் கோரி பத்து ரூபாய் இயக் கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 27 அக்டோபர், 2026

பஞ்சமி நிலங்களை மீட்டு ஏழை மக்களு க்கு வழங்கக் கோரி பத்து ரூபாய் இயக் கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !

பஞ்சமி நிலங்களை மீட்டு ஏழை மக்களு க்கு வழங்கக் கோரி பத்து ரூபாய் இயக் கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !
ராணிப்பேட்டை , அக்டோபர் 27 -
பொது செயலாளர் நல்வினை விஸ்வ ராஜ் பங்கேற்பு!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலி
பட்டாக்கள் மூலம் விற்பனை செய்யப் பட்டதாகக் கூறப்படும் பஞ்சமி நிலங் களை மீட்டு, நிலமற்ற ஏழை, எளிய மக்க ளுக்கு உடனடியாக வழங்க வேண்டும்
என கோரிக்கையை வலியுறுத்தி, பத்து ரூபாய் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடை பெற்றது.இந்த ஆர்ப்பாட்டத் திற்கு மாநில துணைப் பொதுச் செயலா ளர் சமுக ஆர்வலர் தர்மேந்திரன் தலை மை தாங்கினார். மாவட்டச் செயலாளர் வாசுதேவன், மாவட்டத் துணைச் செயலா ளர் சுதாகர், வழக்கறிஞர் பிரிவு மாநிலத்
துணைச் செயலாளர் திருமலை உள்ளிட் டோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர், வழக்கறிஞரும், தகவல் அறி யும் உரிமைச் சட்ட ஆர்வலருமான டாக்டர்
நல்வினை விஸ்வராஜ் சிறப்புரையாற்றி னார்.ராணிப்பேட்டை மாவட்டத்தில் பஞ் சமி நிலங்கள் தொடர்பாக முறைகேடுகள்
நடைபெற்றிருந்தால், அவற்றை உரிய 
விசாரணைக்குட்படுத்தி சட்ட விரோத மாக விற்பனை செய்யப்பட்டநிலங்களை மீட்டு, நிலமற்ற ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறு த்தப்பட்டது.மேலும், போலி பட்டாக்களை  உடனடியாக ரத்து செய்ய வேண்டும்
என்றும், பஞ்சமி நிலங்களைச் சட்டவிரோ தமாக விற்பனை செய்தவர்களின் பத்தி ரப் பதிவை செய்தவர்கள் மற்றும் பட்டா மாற்றத்திற்குத் துணைபோன அதிகாரி கள் மீது உரியவிசாரணை நடத்தி,குற்றம் செய்த அதிகாரிகள் மீது குற்றவியல் மற்றும் லஞ்ச ஒழிப்புச் சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி னர்.நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடு மாவட்ட ஆட்சியிலே நடவடிக்கை எடு ஊழல் போன அதிகாரிகளை உடனடி யாக பதவி நீக்கம் செய் என தண்டனை கோரிக்கைகளையும் முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர் இதில் 60 வருவ தற்கும்  மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் தன்னார்வலர்கள் பல்வேறு மாவட்டத்தில் இருந்து அனைத்து பகுதிகளில் இருந்தும் திரளாக கலந்து கொண்டனர் என்பது குறிப் பிடத்தக்கது.
பஞ்சமி நிலங்கள்தொடர்பாக அரசாணை எண் G.O. Ms. No. 166 மற்றும் உச்ச நீதி மன்றத்தின் தொடர்பு டைய தீர்ப்புகளை முழுமையாக அமல் படுத்த வேண்டும் என்றும் தமிழக அர சையும், வருவாய்த் துறையையும் வலியுறுத்தினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தமிழ்நாடு அரசே ! பஞ்சமிநிலங்களை மீட்டுக்கொடு! வருவாய்த் துறையே!போலி பட்டாக்களை ரத்து செய்!" என்பன உள்ளிட்ட கோஷங் களை எழுப்பித் தங்களது கண்டனத் தைப் பதிவு செய்தனர்.பஞ்சமி நிலங்க ளை மீட்பது தொடர்பாக அரசும் தமிழக 
வருவாய்த் துறையும்   உரிய நடவடிக்கை 
எடுத்து, நிலமற்ற ஏழை மக்களின் உரிமை களைப் பாதுகாக்க வேண்டும் 
என்பதே ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வர்களின் முக்கிய கோரிக்கையாக இருந் தது என்பது குறிப்பிடத்தக்கது

 ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் 9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad