குடியாத்தம் தீயணைப்பு துறை யினரால் விவசாய கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு நன்றி தெரிவித்த பொதுமக்கள் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 8 அக்டோபர், 2026

குடியாத்தம் தீயணைப்பு துறை யினரால் விவசாய கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு நன்றி தெரிவித்த பொதுமக்கள் !

குடியாத்தம் தீயணைப்பு துறையினரால்,
விவசாய கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு நன்றி தெரிவித்த பொதுமக்கள் !
குடியாத்தம், அக்டோபர் 09 -
       வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியில் விவசாய கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு. குடியாத்தம் தீய ணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலைய எல்லைக்குட்பட்ட பரதராமியில்சரவணன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அதில் உள்ள கிணற்றில் நேற்று காலை பசுமாடு ஒன்று தவறி விழுந்து விட்டது. இத்தகவல் உடனடியாக குடியாத்தம் தீயணைப்பு மற்றும்  மீட்பு பணி நிலையத்திற்கு தெரிவிக்கப் பட்டது தகவல் பெறப்பட்டதும், தீயணைப்பு நிலையத்தில் இருந்து நிலைய அலுவலர் சரவணன்  தலைமையில் தீயணைப்பு ஊர்தி மற்றும் அதன் குழுவினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கயிறு மூலம் கிணற்றில் இறங் கிய தீயணைப்பு வீரர்கள் சுமார் இரண்ட ரை மணிநேரம் போராடி,  பசு மாட்டை துறை கயிற்றில் கட்டி உயிருடன் மேலேற் றினர். இதனைத்தொடர்ந்து மீட்கப்பட்ட பசுமாடு  அதன் உரிமையாளர் இடம் ஒப்படைக்கப்பட்டது.

 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad