தூத்துக்குடி - அரசுத் துறையில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற ஆணை பிறப்பிக்கக் கோரி மனு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 14 அக்டோபர், 2026

தூத்துக்குடி - அரசுத் துறையில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற ஆணை பிறப்பிக்கக் கோரி மனு.

தூத்துக்குடி (தெற்கு) மாவட்டம்  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மாவட்டச் செயலாளர், வே. இரஞ்சன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு, அரசுத் துறையில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற ஆணை பிறப்பிக்கக் கோரி விடுத்துள்ள மனு.

ஐயா,
நமது நாட்டில் மழைக்கு எமனாக விளங்கி,நாட்டை வறட்சி ஆக்கும் கொடிய சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது நமது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். அதற்கு செயல் வடிவம் சேர்க்கும் வண்ணமாக மதிமுக பொதுச் செயலர் திருமிகு.வைகோ அவர்கள் ஓர் அற்புதமான நீதி மன்ற ஆணை பெற்றுத் தந்து இருக்கிறார்.

சென்னை உயர்நீதி மன்றத்தில் தலைவர் வைகோ தொடர்ந்த 16485/2015 மனு எண் கொண்ட வழக்கின் மீது நீதி அரசர்கள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பாரத சக்ரவர்த்தி ஆகியோர் 18-3-2026 அன்று சீமைக் கருவேல மரங்களை அழிக்க ஆணை பிறப்பித்து இருக்கின்றார்கள்.

அவ்ஆணையை செயல்படுத்த வேண்டியது ஓர் நல்ல அரசின் கடமையாகும்.

ஆகவே, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள்,
மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் ஊர்ஆட்சி சாலைகளில் பரவிக் கிடக்கிற இச்சீமைக் கருவேலமரத்தை அகற்ற ஆணை இட தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இதற்கு முதற்புள்ளி வைக்கின்ற வண்ணம் நம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து இச்சீரியப் பணியை தொடங்குமாறும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். என கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad