பேரணாம்பட்டு வனத்துறை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 3 அக்டோபர், 2026

பேரணாம்பட்டு வனத்துறை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

பேரணாம்பட்டு வனத்துறை சார்பில்
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி !
பேரணாம்பட்டு, அக்டோபர் 3 -
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு உலக வன உயிரின வார விழாவை முன்னிட்டு, வேலூர் வன மண்டல தலைமை வனப் பாதுகாவலர் மாரிமுத்து, ஐ.எஃப்.எஸ்., மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், ஐ.எஃப்.எஸ்., ஆகியோரின் அறிவுறுத்த லின்படியும், உதவி வனப் பாதுகாவலர் மணிவண்ணன் வழிகாட்டுதலின்படியும் பேரணாம்பட்டு வனச்சரகம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் தூய்மைப் பணி நடைபெற்றது.
பேரணாம்பட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட மோர்தானா காப்புக்காடு, கோக்கலூர் பகுதி, பத்தலபல்லி–வீ.கோட்டா சாலை மற்றும் காப்புக்காட்டை ஒட்டியுள்ள பகுதி களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு வனச் சரக அலுவலர் A. மோகனவேல் தலைமை வகித்தார். வனவர்கள் சம்பத்குமார், இளையராஜா, திருநாவுக்கரசு, கார்த்திக் மற்றும் வனப்பணியாளர்கள், கிராம வனக் குழுத் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, வனப்பகுதியைஒட்டியுள்ள பகுதிகளில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் கழிவுகளை வனப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அகற்றி தூய் மைப் பணியில் ஈடுபட்டனர். மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டால் வனச்சூழல் மற்றும் வன உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், வனத்தையும் வன உயிரினங்களையும் பிளாஸ்டிக் மாசு பாட்டிலிருந்து பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad