குடியாத்தம் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் 407 பேர் பங்கேற்பு 143 பேர் கண் அறுவை சிகிச் சைக்கு பரிந்துரை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 3 அக்டோபர், 2026

குடியாத்தம் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் 407 பேர் பங்கேற்பு 143 பேர் கண் அறுவை சிகிச் சைக்கு பரிந்துரை !

குடியாத்தம் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் 407 பேர் பங்கேற்பு 143 பேர் கண் அறுவை சிகிச் சைக்கு பரிந்துரை !
குடியாத்தம், அக்டோபர் 3 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவ மனை மற்றும் வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணை ந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் குடியாத்தம் ரோட்டரி சங்க கட்டிடத் தில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது.
முகாமிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் டி.எஸ். ரவிச்சந்திரன் தலைமைவகித்தார் ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் ஜே.கே.என். பழனி சிறப்பு அழைப்பாள ராக கலந்து கொண்டு முகாமைதொடங்கி வைத்தார். தொடர்ந்து கொடையாளர் மகேஸ்வரன் மற்றும் கண் மருத்துவர் களை கௌரவித்து பாராட்டினார்.இலவச கண் சிகிச்சை முகாமில் மொத்தம் 407 பேர் கலந்து கொண்டு கண் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை பெற்றனர் பரிசோதனையின் முடிவில் 75 ஆண்கள், 68 பெண்கள் என மொத்தம் 143 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப் பட்டனர் நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க செய லாளர் ஜெ. தமிழ்ச்செல்வன்பொருளாளர் டாக்டர் வி. பாலாஜி, முன்னாள் தலைவர் கள் டாக்டர் எம்.எஸ். திருநாவுக்கரசு, ஆர். கே. மகாலிங்கம், ஏ.ஜே.ஏ. கார்த்திகேயன், என். சத்தியமூர்த்தி, அண்ணாமலை, செ.கு. வெங்கடேசன், மேகராஜ் மற்றும் சங்க உறுப்பினர்கள் எம்.ஆர். மணி, சி.பி. மகாராஜன், பரமேஸ்வரன்,தயாநிதி ஜம்பு மதியழகன், பிரஸ் ஜெ. தமிழ்ச்செல்வன், பாலாறு மருத்துவமனை நிர்வாகி எஸ். மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.முகாம் சிறப்பாக நடைபெறுவதற் கான அனைத்து ஏற்பாடுகளையும் முகாம் தலைவர் என். ஜெயச்சந்திரன், செயலா ளர் எஸ். பார்த்திபன் ஆகியோர் செய்தி ருந்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad