அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் ஏழு நாள் சிறப்பு முகாம் !
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நெல்லூர் பேட்டை நாட்டு நலப்பணி திட்டத்தின் ஏழு நாள் சிறப்பு முகாம் 26/9/2026 முதல் 2/10/2026 வரை சீவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது
நிறைவு நாளான இன்று ஒன்றிய குழு உறுப்பினர் U. அமுதலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் ஆர் ஜெய குமார் அனைவரையும் வரவேற்றார். என் எஸ் எஸ் மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசு பொருள்களை வழங்கி நாட்டு நலப் பணி திட்டத்தின் முக்கிய திட்டத்தை குறித்து முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் சடகோபன், பள்ளிஅம்பாஸிடர் புலவர் கோ மணி ஆகியோர் சிறப்புரை.. வழங்கினார்கள் ஊராட்சி துணைத் தலைவர் அஜிஸ், முன்னாள் உடற்கல்வி இயக்குனர் புனிதவதி, வணிகவியல் ஆசிரியை மோகனவள்ளி, முதுகலை தமிழ் ஆசிரியை நளினிதேவி, தலைமை ஆசிரியை தயாநிதி,பட்டதாரி ஆசிரியர் சங்கர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வெங்கடேசன், பள்ளி மேலாண் மை குழு தலைவர் பூங்கொடி, நாட்டாண் மை அசோக் குமார், முன்னாள் பெற் றோர் ஆசிரியர் கழக தலைவர் விஜய குமார், காளியம்மன் அறக்கட்டளையின் துணைத் தலைவர் ஜலபதி, பாபு, புரு ஷோத்தமன் யுவராஜ் மற்றும் பொறுப் பாளர்கள் இளைஞர் அணி பொருளாளர் ஜெயசூர்யா, பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் மகேந்திரன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். முகாமின் ஏழு நாள் அறிக்கையை உதவி திட்டஅலுவலர் ஹரிகிருஷ்ணன் வாசித்தார்.முடிவில் முதுகலை தாவரவியல் ஆசிரியர் சி சுதாகர் நன்றி கூறினார். மாணவர்களு க்கு விளையாட்டு போட்டி நடத்தி பரிசு களும் வழங்கப்பட்டது. இம்மு முகாமில் போதைப்பொருள் டெங்கு காசநோய் இல்லாத இளைஞர்களை உருவாக்குதல் சார்ந்து ஊர்வலம், மரம் நடுதல், இலவச காய்கறி செடி மரம் வழங்குதல், பிளாஸ் டிக் ஒழிப்பு, கால்நடை மருத்துவ முகாம், இலவச பொது மருத்துவ முகாம், பட்டிமன்றம், சாதனை மாணவர்கள் நிகழ்ச்சி, நலம் தரும் சித்த மருத்துவம், களப்பயிற்சி, யோகா, சிரிப்பு யோகா, போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக