இடைத்தேர்தல் வெற்றி மகிழ்ச்சி வேலூர் மேற்கு மாவட்ட த.வெ.க சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிய நிர்வாகிகள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 10 அக்டோபர், 2026

இடைத்தேர்தல் வெற்றி மகிழ்ச்சி வேலூர் மேற்கு மாவட்ட த.வெ.க சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிய நிர்வாகிகள்.


தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்களான மரகதம் குமரவேல் மற்றும் பி. சத்தியபாமா ஆகியோர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, வேலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆர். வேல்முருகன் சார்பில் நடைபெற்ற கொண்டாட்டத்தில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். நிகழ்ச்சியின்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் வகையில் கட்சி நிர்வாகிகள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி, கிளை, பகுதி மற்றும் வார்டு நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் உள்ள கட்சி நிர்வாகிகளும், சார்பு அணிகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களின் வெற்றியை முன்னிட்டு நடைபெற்ற இந்தக் கொண்டாட்டம், அப்பகுதியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

கோ.பாபு
திருவண்ணாமலை
மாவட்ட செய்தியாளர்
9843780102

வி.ஜெகன் 
திருவண்ணாமலை மாவட்டம் ஒளிப்பதிவாளர் 
9894381487

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad