குடியாத்தத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 10 அக்டோபர், 2026

குடியாத்தத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.


வேலூர் மாவட்டம், குடியாத்தம் இந்து மக்கள் கட்சித் தலைவர் தர்மா என்பவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் ஆகியோரைத் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி, அதனைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் குடியாத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளர் கு. குமரேசன் தலைமை தாங்கினார்.
இதில், கட்சியின் மாநிலச் செயலாளர் சிவ. செல்ல பாண்டியன் கண்டன உரையாற்றினார். மேலும், மண்டலச் செயலாளர் சே. சந்திரன் சிறப்புரையாற்றினார்.
இந்து மக்கள் கட்சித் தலைவர் தர்மா பேசியதாகக் கூறப்படும் கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

கோ.பாபு
திருவண்ணாமலை
மாவட்ட செய்தியாளர்
9843780102

வி.ஜெகன் 
திருவண்ணாமலை மாவட்டம் ஒளிப்பதிவாளர் 
9894381487

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad