முத்தியால்பேட்டையில் மின்தடைக்கு நிரந்தர தீர்வு: ரூ.36 லட்சத்தில் 2 மின்மாற்றிகள் திறன் உயர்வு - MLA வையாபுரி மணிகண்டன் அர்ப்பணிப்பு..! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 10 அக்டோபர், 2026

முத்தியால்பேட்டையில் மின்தடைக்கு நிரந்தர தீர்வு: ரூ.36 லட்சத்தில் 2 மின்மாற்றிகள் திறன் உயர்வு - MLA வையாபுரி மணிகண்டன் அர்ப்பணிப்பு..!

 


புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் மின்தடை பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், முதலமைச்சர் ரங்கசாமி வழிகாட்டுதலின்படி, சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி_மணிகண்டன் பதவியேற்ற நாள் முதல் தொடர்ந்து தீவிர முயற்சி மேற்கொண்டார்.


இதன் பயனாக முத்தியால்பேட்டை- பாரதிதாசன் வீதியில் உள்ள பாரதிதாசன் SS- II மின்மாற்றியை ரூ.12 லட்சம் செலவில் 200 கிலோவாட் திறனிலிருந்து 315 கிலோவாட் திறன் கொண்டதாகவும், கருவடிக்குப்பம் பிரதான சாலையில் உள்ள சவரப்பேட் SS-3 மின்மாற்றியை ரூ.20 லட்சம் செலவில் 315 கிலோவாட் திறனிலிருந்து 630 கிலோவாட் திறன் கொண்டதாகவும் மாற்றி அமைத்தார். மேலும் ரூ.4 லட்சத்தில் மினி பில்லரும் அமைக்கப்பட்டது. புதிதாக திறன் அதிகரிக்கப்பட்ட மின்மாற்றிகள், மினி பில்லர் திறப்பு விழா மற்றும் முத்தியால்பேட்டை ரொசாரியோ வீதியில் புதிதாக புதைவட கேபிள்களை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா நடந்தது.


முத்தியால்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் மின்மாற்றிகளை இயக்கி வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் மின்துறை கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார், செயற்பொறியாளர் திலகராஜ், இளநிலை பொறியாளர் செல்வமுத்தையன் மற்றும் மின்துறை ஊழியர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணிக் கட்சித் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.


மக்களின் தேவைகளை அறிந்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, முத்தியால்பேட்டை தொகுதியை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதே எங்கள் இலக்கு என சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad