வந்தவாசி நகரின் அடையாளமாகவும், வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னமாகவும் திகழும் வந்தவாசி கோட்டைப் பகுதியை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, வந்தவாசி கோட்டையின் வரலாற்று முக்கியத்துவத்தை பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் தொல்லியல் துறை சார்ந்த அதிகாரிகள், மாணவர்களிடம் வந்தவாசி கோட்டையின் வரலாற்றை விளக்கிக் கூறினர். கடந்த 1760 ஆம் ஆண்டு வந்தவாசிப் பகுதியில் ஆங்கிலேயப் படைகளுக்கும், பிரெஞ்சுப் படைகளுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதிப் கட்டப் போர் நடைபெற்றது. இந்தப் போரில் ஆங்கிலேயப் படைகள் வெற்றி பெற்றன. இந்த வரலாற்று நிகழ்வுகளை இளைய தலைமுறையினர் மற்றும் பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், நமது பாரம்பரிய சின்னங்களை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியருடன் தொல்லியல் துறை மற்றும் வருவாய்த்துறை சார்ந்த அரசு அதிகாரிகளும், திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட இணை செயலாளர் ஆர்.ஐ. கார்த்தி, வந்தவாசி நகர செயலாளர் வி.ஆர். ராஜேஷ் மற்றும் நகர நிர்வாகி அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோ.பாபு
திருவண்ணாமலை
மாவட்ட செய்தியாளர்
9843780102
வி.ஜெகன்
திருவண்ணாமலை மாவட்டம் ஒளிப்பதிவாளர்
9894381487
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக