தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்க கோரி டெல்லியில் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் - தலைவர்கள் கைது கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 10 அக்டோபர், 2026

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்க கோரி டெல்லியில் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் - தலைவர்கள் கைது கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா அலுவலகம் முன்பு தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமாரை பதவி நீக்க கோரி இன்று டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ எம்.எல் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் இணைந்து மாபெரும் போராட்டம் நடத்தின.

டெல்லி மாநகரில் பல்லாயிரக்கணக்கான கூடியிருந்த நிலையில், காவல்துறையும், துணை ராணுவப் படையினரும் அடக்குமுறையை ஏவி, தலைவர்களை அடாவடியாக கைது செய்துள்ளனர்.

அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், வாசுகி, கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மத்திய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களை டெல்லி காவல்துறை அத்துமீறி கைது செய்துள்ளது. மேலும் கட்சியின் தலைமை அலுவலகத்தை காவல்துறை முற்றுகையிட்டுள்ளது.

இந்த அடாவடித்தனமான டெல்லி காவல்துறையின் நடவடிக்கையையும், துணை ராணுவத்தினரின் அடக்குமுறையையும் கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் பல்வேறு ஒன்றியங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள், ஏராளமானோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராகவும், டெல்லி காவல்துறைக்கு எதிராகவும் 
கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
சி.பி.எம் மாவட்ட செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்,எம்.எல் மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி,விவசாய அணி மாவட்ட செயலாளர் எம்.எல் கலியமூர்த்தி,சிபிஎம்மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கே. பூவராகவன்,எம்.செந்தில்,ஜெ.ஜெயக்குமார்,மாதர் சங்க மாநில குழு உறுப்பினர் தேவி,ஒன்றிய செயலாளர்கள் வி.ரகுராமன்,கே.ஆனந்தராஜ்,வேலா. பாலகிருஷ்ணன், அ.இ.வி தோச மாவட்ட குழு எஸ்.ஆரோக்கியதாஸ்,மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad