திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவப் பொருட்கள் தட்டுப்பாடா பொதுமக்கள் புகார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 10 அக்டோபர், 2026

திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவப் பொருட்கள் தட்டுப்பாடா பொதுமக்கள் புகார்.


திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊசி, நீடில் உள்ளிட்ட மருத்துவப் பொருட்கள் இல்லை எனக் கூறி, குழந்தையுடன் சிகிச்சைக்காக வரும் பொதுமக்களையே வெளியில் உள்ள மெடிக்கல் கடையில் மருந்துப் பொருட்களை வாங்கி வரச் சொல்வதாகப் புகார் எழுந்துள்ளது.


அரசு மருத்துவமனையை நம்பி குழந்தைகளுடன் சிகிச்சைக்காக வரும் பொதுமக்களுக்கு, தேவையான மருத்துவப் பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், சிகிச்சைக்காக வரும் ஏழை, எளிய மக்கள் சிரமத்திற்கு ஆளாவதாகப் புகார் தெரிவிக்கின்றனர்.


அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை மருத்துவ வசதிகளும், சிகிச்சைக்குத் தேவையான மருத்துவப் பொருட்களும் போதிய அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.


எனவே, களம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவப் பொருட்கள் தட்டுப்பாடு உள்ளதா என்பது குறித்து சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், பொதுமக்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.


அரசு மருத்துவமனையை நாடி வரும் மக்களுக்கு முறையான சிகிச்சை கிடைக்குமா மருத்துவப் பொருட்கள் தட்டுப்பாடு சரிசெய்யப்படுமா என்பதைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்பார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


கோ.பாபு
திருவண்ணாமலை
மாவட்ட செய்தியாளர்
9843780102


வி.ஜெகன் 
திருவண்ணாமலை மாவட்டம் ஒளிப்பதிவாளர் 
9894381487

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad