வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகருக்குப் பெருமை சேர்க்கும் வகையில், தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் வேலூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் இணைந்து நடத்தும் 52-வது ஜூனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் மாபெரும் கபடிப் போட்டி 2026, குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கியது.
இந்த மாபெரும் கபடிப் போட்டியின் தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் குடியாத்தம் நகர மன்றத் தலைவரும், நகர திமுக கழகச் செயலாளருமான S. சௌந்தர்ராசன், அவர்கள் கலந்துகொண்டார்.
தமிழகத்தின் 38 மாவட்டங்களில் இருந்து வருகை தந்துள்ள விளையாட்டு வீரர்களைப் பாராட்டி, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புரையாற்றிய நகர மன்றத் தலைவர் S. சௌந்தர்ராசன், கபடிப் போட்டியைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட திமுக கழகத் துணைச் செயலாளர் G. S. அரசு, குடியாத்தம் நகர திமுக கழகத் துணைச் செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான ம. மனோஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், அமெச்சூர் கபடி கழக நிர்வாகிகள், மாவட்ட கபடிக் குழுத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
தமிழகத்தின் 38 மாவட்டங்களைச் சேர்ந்த இளம் வீரர்கள் பங்கேற்கும் இந்தப் போட்டி, இளைஞர்களின் விளையாட்டுத் திறனை வெளிப்படுத்துவதற்கும், கபடி விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கும் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
குடியாத்தம் நகரில் நடைபெற்ற இந்த மாபெரும் கபடிப் போட்டி, விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோ.பாபு
திருவண்ணாமலை
மாவட்ட செய்தியாளர்
9843780102
வி.ஜெகன்
திருவண்ணாமலை மாவட்டம் ஒளிப்பதிவாளர்
9894381487
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக