திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி:
மகாளய அமாவாசையை முன்னிட்டு, ஆரணி ஸ்ரீ புத்திர காமேஸ்வரர் கோவில் அருகில் தர்ப்பணம் கொடுக்க வரும் பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் பந்தல் வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பாக, ஆரணி சட்டமன்ற உறுப்பினரும், திருவண்ணாமலை மத்திய மாவட்டக் கழகச் செயலாளருமான எல். ஜெயசுதா லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மகாளய அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம் கொடுக்க வரும் பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாத வகையில், குடிநீர் வசதி மற்றும் பந்தல் வசதிகளை ஏற்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
உடன்: ஆரணி நகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கோ.பாபு
திருவண்ணாமலை
மாவட்ட செய்தியாளர்
9843780102
வி.ஜெகன்
திருவண்ணாமலை மாவட்டம் ஒளிப்பதிவாளர்
9894381487
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக