தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் கடலூர் மின் பகிர்மான , சிதம்பரம் கோட்டம் சார்பில் மாதாந்திர மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் எதிர்வரும் அக்டோபர் 13, 2026 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற உள்ளது.
இக்கூட்டம் சிதம்பரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 10.30 மணி முதல் மதியம் 01.00 மணி வரை, கடலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும்.
மேலும், மின்நுகர்வோர் வசதிக்காக இத்தகைய குறைதீர்க்கும் கூட்டம் இனி ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க்கிழமையன்று தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் சிதம்பரம் நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் அண்ணாமலை நகர், சி.முட்லூர், கிள்ளை, பிச்சாவரம், பு.முட்லூர், பரங்கிப்பேட்டை, சாமியார்பேட்டை, புதுச்சத்திரம், பெரியப்பட்டு, தீத்தாம்பாளையம், வயலாம்பூர், பூவாலை, புவனகிரி, குறியாமங்களம், சாத்தப்பாடி, கீரப்பாளையம், அம்மாபேட்டை, வல்லம்படுகை, வக்கராமாரி, கருப்பூர், குமராட்சி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி மின்நுகர்வோர்கள் கலந்துகொண்டு, தங்களது மின்சார வாரியம் சார்ந்த குறைகள் மற்றும் கோரிக்கை மனுக்களை நேரில் அளித்து தீர்வு பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
P ஜெகதீசன்
கடலூர் மாவட்ட ஒளிப்பதிவாளர்
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு கடலூர் மாவட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக