வாணியம்பாடி அருகே விளையாட்டு மைதானம் கேட்டு இளைஞர்கள் அரசு பேருந்து சிறைப்பிடித்து சாலை மறியல்போராட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 15 அக்டோபர், 2026

வாணியம்பாடி அருகே விளையாட்டு மைதானம் கேட்டு இளைஞர்கள் அரசு பேருந்து சிறைப்பிடித்து சாலை மறியல்போராட்டம் !

வாணியம்பாடி அருகே விளையாட்டு மைதானம் கேட்டு  இளைஞர்கள் அரசு பேருந்து சிறைப்பிடித்து சாலை மறியல்
போராட்டம் !
வாணியம்பாடி, அக்டோபர் 15 -
 திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சிக்கணாங்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கிரிக்கெட், கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வமாக விளையாடி வருகின்றனர்மேலும் மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்று கோப்பைகளையும் பரிசுகளையும் பெற்று வருகின்றனர்.இந்நிலையில், இளைஞர்கள் பயிற்சி மேற் கொள்வதற் கும், விளையாட்டுத் திறனை மேம்படுத்து வதற்கும் சிக்கணாங்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு இடத்தில் விளையாட்டு மைதானம் அமைத்துத் தர வேண்டும் எனக்கோரி கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு அளித் தும், இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப் படவில்லை எனக் கூறி இளைஞர்கள் சிக்கணாங்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் திரண்ட அவ்வழியாக வந்த அரசு பேருந் தைச் சிறைப்பிடித்தனர். தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் தாங்கள் வென்ற கோப்பைகளையும் பரிசுகளையும் பேருந் தின் முன்பு வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி காவல் துணைக்  கண் காணிப்பாளர் மகாலட்சுமி தலைமை யிலான போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத் தினர். இதனை தொடர்ந்து இளைஞர்கள் விளையாட்டு மைதானம் அமைக்க ஏற்ற தாகத் தாங்கள் தேர்வு செய்துள்ள இடத் தை அதிகாரிகளை அழைத்து சென்று காண்பித்தனர். அந்த இடம் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து, விளையா ட்டு மைதானம் அமைப்பதற்கான இடத் தைத் தேர்வு செய்து தர நடவடிக்கை எடுக் கப்படும் என வட்டாட்சியர் உறுதியளித் தார்.இதையடுத்து, இளைஞர்கள் போராட் டத்தைக் கைவிட்டனர். சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவனம் இனை ஆசிரியர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad