கடலூர் மாவட்டம், சிதம்பரம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்கு ஒன்றில் தொடர்புடைய எதிரியைத் திறம்படக் கைது செய்து அழைத்து வந்த உதவி ஆய்வாளர் மற்றும் காவல் குழுவினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டுச் சான்று வழங்கிப் பாராட்டியுள்ளார்.
அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பதிவான குற்ற வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த முக்கிய எதிரி, தலைமறைவாகி வெளிமாநிலத்திற்குத் தப்பியோடியது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில், சிதம்பரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அவர்களின் நேரடிக் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இவ்வழக்கில் துரிதமாகச் செயல்பட்ட அண்ணாமலை நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ் முருகன் மற்றும் சிறப்புப் காவல் குழுவினர் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்திற்குத் தீவிர பயணம் மேற்கொண்டு, அங்கு பதுங்கியிருந்த எதிரியை மிகச் சாதுரியமாகக் கைது செய்து கடலூருக்கு அழைத்து வந்தனர்.
தமது கடமையை உணர்ந்து, வெளிமாநிலம் வரை சென்று குற்றவாளியை வெற்றிகரமாகப் பிடித்து வந்த உதவி ஆய்வாளர் சுரேஷ் முருகன் மற்றும் உடன் சென்ற காவலர்களின் துணிச்சலான பணியைப் பாராட்டும் விதமாக, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டுச் சான்று வழங்கிப் பாராட்டினார்
இந்நிகழ்வின்போது சிதம்பரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உடனிருந்து காவல்துறையினரை ஊக்கப்படுத்தினார். குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் எங்கு தப்பியோடினாலும் காவல்துறையின் நீண்ட கரங்களில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை இப்பணி மீண்டும் நிரூபித்துள்ளதாகப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் காவல்துறையினருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்
P ஜெகதீசன்
மாவட்ட ஒளிப்பதிவாளர்
தமிழக குரல் கடலூர் மாவட்டம் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக