வாலாஜா அடுத்த மேல மேடு கன்னி காபுரம் கிராமத்தில் ஐயப்பன் ஆலய கும்பாபிஷேக விழா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 15 அக்டோபர், 2026

வாலாஜா அடுத்த மேல மேடு கன்னி காபுரம் கிராமத்தில் ஐயப்பன் ஆலய கும்பாபிஷேக விழா !

வாலாஜா அடுத்த மேல மேடு கன்னி காபுரம் கிராமத்தில் ஐயப்பன் ஆலய  கும்பாபிஷேக விழா !
ராணிப்பேட்டை , அக்டோபர் 15 -     ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த மேலமேடு கன்னிகாபுரம் கிரா மத்தில் அமைந்துள்ள அருள் மிகு  ஹரி ஹரசுதன் ஐயப்பன் ஆலய நூதன அஷ்ட பந்தன கும்பாபிஷேக விழா வெகு விமரி சையாக நடைபெற்றது. இதில் சிறப்பு 
அழைப்பாளராக பாமகவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் தெற்கு 
ஒன்றிய செயலாளர் ரவி கலந்து கொண்டு சிறப்பித்தார் இதை யொட்டி, கோயிலில் யாகசாலை பூஜைகள், 
கணபதிஹோமம்,  லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்ட சிறப்பு 
வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க, புனித நீர் கோபுர கலசங்களின் மீது ஊற்றப்பட்டு 
கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங் காரங்கள் செய்யப்பட்டு மகா தீபாராத னை நடைபெற்றது. இதனைத் தொடர் ந்து கன்னிமூல கணபதி, பால முருகர் ஆகிய தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற் றப்பட்டு கும்பாபிஷேகா விழா நடை பெற்று.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.பக்தர்களுக்குஅன்னதானமும் 
வழங்கப்பட்டது . விழாவிற்கான ஏற்பாடு களை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் விழாக்குழுவினர் ஏற்பாடு  
செய்திருந்தனர் 

ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad