திருப்பத்தூர் மாவட்டம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையம் சார்பில் நடைபெற்ற ஒருங்கி ணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி-II மற்றும் II A பணிகள்) முதல் நிலைத் தேர்வை மாவட்ட ஆட்சியர் வே.நல்லசிவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.வாணியம்பாடி இஸ்லாமிய ஆண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இஸ்லாமிய மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஆதியூர் ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மை யங்களில் மாவட்ட ஆட்சியர் நேரில்ஆய்வு மேற்கொண்டார். தேர்வு மையங்களில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் மற்றும் தேர்வு நடைபெறும் விதம் குறித்து பார்வையிட்ட அவர், தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்பட்டிருந்த முன்னேற்பாடு கள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர் களிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக