ராணிப்பேட்டை, நவம்பர் 11 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழக அரசின் பத்திரப்பதிவுத் துறையை நவீன மயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதி யாக தனியார் நிறுவனங்களுக்கு ஒப் பந்தம் வழங்கும் முயற்சியைக் கண்டித்து, வேலூர் ஒருங்கிணைந்த ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆவண எழுத்தர் கள், உதவியாளர்கள் மற்றும் கணினி தட்டச்சு பணியாளர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட் டனர்.இதன் ஒரு பகுதியாக, ராணிப் பேட்டை பதிவு மாவட்டம் வாலாஜாநகர் சார்பதிவாளர் அலுவலகம் அருகே
ஆவண எழுத்தர்கள், உதவியாளர்கள் மற்றும் கணினி தட்டச்சு பணியாளர்கள் சார்பில் நேற்று கண்டன போராட்டம் நடைபெற்றது. முன்னதாக, கடந்த நவம் பர் 6-ஆம் தேதி வேலூர் மாவட்ட பத்திரப் பதிவு அலுவலக வளாகத்தில் மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப் பட்டு, ஆவணங்கள் எழுதுதல் மற்றும் பத்திரப்பதிவு தொடர்பான பணிகளை மேற்கொள்ளாமல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.பத்திரப்பதிவுத் துறையில் நவீ னமயமாக்கல் என்ற பெயரில் ஆன்லைன் நடைமுறைகளை விரிவுபடுத்துவதும், தனியார் நிறுவனங்கள் மூலம் நவீன சேவை மையங்களை அமைப்பதும் தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என ஆவண எழுத்தர்கள் எதிர்ப்பு தெரி வித்தனர். பல ஆண்டுகளாக இத்தொழி லை நம்பி வாழ்ந்து வரும் ஆயிரக்கணக் கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். பத்திரப்பதிவுத் துறையை தனியார் மயமாக்கும் முயற்சி களைக் கைவிட்டு, அரசின் நேரடி நிர்வா கத்தின் கீழ் தொடர்ந்து செயல்பட நட வடிக்கை எடுக்க வேண்டும் என போ ராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.நமது ஒற்றுமையே நமது பலம் என்ற முழக்கத் துடன் நடைபெற்ற இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அனைத்து ஆவண எழுத்தர்கள், உதவியாளர்கள் மற்றும் கணினி தட்டச்சு பணியாளர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக்கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக