வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேங்குன்றம் பகுதியில் ஞானவேல் என்பவரை சுட்டுக்கொன்ற பூவரசனுக்கு துப்பாக்கி சப்ளை செய்த நபர் கைது.
அணைக்கட்டு தாலுகா ஒடுக்கத்தூர் நேமந்தபுரத்தை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் விக்னேஷ் (வயது 30) இவர் கோழி லோடு லாரியில் வேலை செய்பவர். மேலும் சில தினங்களுக்கு முன்பு குடியாத்தம் பகுதியில் பாமக பிரமுகர் ஞானவேலை சுட்டுக்கொன்ற பூவரசனுக்கு இவர் நாட்டுத் துப்பாக்கி சப்ளை செய்தது தெரியவந்தது.மேலும் பூவரசன் ஞானவேலை சுட்டு கொன்ற தற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இதே விக்னேஷ் சேங்குன்றம் கிராமத்திற்கு வந்திருந்ததும் அப்பொழுது ஞானவேலு க்கும் விக்னேஷ்க்கும் வாக்குவாதம் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. அதில் வெளியூர் பகுதியில் இருந்து எங்கள் ஊருக்கு எதற்காக வந்தாய் என்று ஞான வேல், விக்னேஷிடம் கேட்டு வாக்குவாத த்தில் ஈடுபட்டதும் தெரியவருகிறது.
மேற்கொண்டு கொலையாளி பூவரசனு க்கு நாட்டுத் துப்பாக்கியை சப்ளை செய்த விக்னேஷ் குடியாத்தம் தாலுகா போலீசா ரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். துப்பாக்கி சப்ளை செய்த விக்னேஷ் வேறு யாருக்காவது துப்பாக்கி மற்றும் அதற்கு தேவையான பொருட்களை சப்ளை செய்தாரா என்ற
கோணத்திலும் சிலரிடம் குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக