ஆற்காடு அருகே மக்கள் தொடர்புத் திட்ட முகாம் – கலெக்டர் எம்.எல்.ஏ பங்கேற்பு !
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், புதுப்பாடி கிராமத்தில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் இம்முகாம் புதுப் பாடி கிராமத்தில் உள்ள J.P. விஜயலட்சுமி மகாலில் நடைபெற்றது இதில் மாவட்ட ஆட்சியர் ந. பிரியா ரவிச்சந்திரன், தலை மை வகித்தார். ராணிப்பேட்டை வருவா ய்க் கோட்டாட்சியர் க. ராஜி அவர்கள் வர வேற்புரை வழங்குகினார். மாவட்ட வரு வாய் அலுவலர் ந.சரவணன் முன்னிலை உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக
ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் S.M. சுகுமார் MLA, கலந்து கொண்டு, பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்க ளைப் பெற்று, அரசின் நலத்திட்ட உதவி களை வழங்கிச் சிறப்புரையாற்றினார்.
இம்முகாமில் வேளாண்மைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, பொதுச் சுகாதாரத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கூட்டுறவுத் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர் வோர் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பல் வேறு அரசுத் துறைகள் சார்பில் செயல் படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்க உரை நிகழ்த்தப்பட்டது. ரூபாய் 5.78 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங் கப்பட்டன.
விழாவில் ஆற்காடு கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் திமிரி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சொ ரையூர் M.குமார், ஒன்றிய நிர்வாகிகள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் R.சுரேஷ், முன்னாள் ஒன்றிய குழு உறுப் பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண் டனர் ஆற்காடு வட்டாட்சியர் க. தேவராஜ் அவர்கள் நன்றியுரையாற்றினார் .
மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக