வணிகர்கள் சங்க பேரவையின் மாநில தலைவருமான மறைந்த த. வெள்ளையனின் 78 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.
இதைமுன்னிட்டு அவரது சொந்த ஊர் பிச்சிவிளையில் உள்ள நினைவிடத்தில் தவெள்ளையன் வணிகர் சங்கங்களின் பேரவை நிறுவனத் தலைவர் T. V. D. தினகரன் வெள்ளையன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து திருச்செந்தூர் ரயில் நிலையம் முன் பொதுமக்கள் 500 பேருக்கு அன்னதானம் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் மாரியப்பன், மாவட்ட மண்டல பொறுப்பாளர் ராஜன், மேற்கு மாவட்ட தலைவர் மாரியப்பன், கிழக்கு மாவட்ட தலைவர் ரவி, தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் முருகன் மற்றும் சங்க நிர்வாகிகள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக மதி.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக