ஐக்கிய அரபு அமீரகத் துபாய் முஹஸினா பகுதியில் உள்ள நியூ டாவ்ன் தனியார் பள்ளியில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் அமைப்பின் தலைவி டாக்டர் ஷீலு தலைமையில் மிக பிரமாண்டமான தீபாவளி மற்றும் Pink Day போற்றும் விதமாக மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய் விழிப்புணர்வுக்காக உலக சாதனை நிகழ்ச்சியாக 1500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட தாண்டியா கோல் ஆட்ட கொண்டாட்டம் மிக கோலகலமாக நடைபெற்றது மேலும் பல்வேறு ஆடல், பாடல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளோடு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள திருவிழாகோலமாக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு கௌரவ விருந்தினராக அமீரகத்தின் முன்னாள் தொழிலாளர் துறை அமைச்சர் டாக்டர் முஹம்மது சயீத் அல் ஹிந்தி கலந்துகொண்டார் மேலும் சிறப்பு விருந்தினர்களாக ட்ரிபில் எம் தயாரிப்பு நிறுவனம் நிறுவனர் பாபு ராமகிருஷ்ணன், TEPA டாக்டர் பால் பிரபாகர், சித்திரை பொன்செல்வன், இன்ஸ்டா புகழ் பிரியா மற்றும் சரவணன், வளைகுடா முதன்மை நிருபர் Kamalkvl , அமீராக நடிகர் அப்துல்லா ஜபலி, தினகுரல் தமிழ் தேசிய தமிழ் நாளிதழின் முதன்மை நிருபர் நஜீம் மரிக்கா, எமிரேட்ஸ் நியான உஸ்மான் அலி, தமிழ் திரைப்பட நடிகை சுஜிபாலா உள்ளிட்டோர் மேலும் பார்வையாளர்களாக டிக்டாக் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கு மேற்பட்டோர் குடும்பத்தோடு கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக அமீரக தமிழ் சங்கத்தின் டாக்டர் தலைவி ஷீலா நன்றி கூறி நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் கொடுத்து மேலும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவாளர்களுக்கும் குறிப்பாக விழாவிற்கு முழு ஆதரவு அளித்த அன்னதங்கம் ஜுவல்லரி நிறுவனத்திற்கும் அதன் உரிமையாளருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக