செஞ்சி அருகே மாயமான சிறுமி கடலூர் புவனகிரி அருகே பார்த்ததாக 100க்கு கால் அழைத்ததால் திடீர் திருப்பம் CBCID விசாரணை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 5 நவம்பர், 2026

செஞ்சி அருகே மாயமான சிறுமி கடலூர் புவனகிரி அருகே பார்த்ததாக 100க்கு கால் அழைத்ததால் திடீர் திருப்பம் CBCID விசாரணை.


கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள வயலாமூரைச் சேர்ந்த அருள்ஜோதி என்பவர், செஞ்சி மாயமான சிறுமி ஹேமலதா மற்றும் அவரது தாயாரைப் போன்ற தோற்றமுடைய இருவரை புவனகிரி காந்தி சிலை பகுதியிலுள்ள சலூன் கடை அருகே பார்த்ததாகக் கூறி அவசர உதவி எண் 100 க்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
அருள்ஜோதியின் வாக்குமூலம் தலைவிரி கோலத்தில் வந்து யாசகம் கேட்ட அப்பெண்ணிற்கும் சிறுமிக்கும் ரூ100 வழங்கியதாகவும், பின்னர் செய்திகளைப் பார்த்தபோது அவர்கள் மாயமான ஹேமலதா மற்றும் அவரது தாயாரைப்போல் இருந்ததை உணர்ந்ததாகவும் கூறியுள்ளார்.
  அதிகாரிகளின் விசாரணை தகவலின் அடிப்படையில் புவனகிரி காவல்துறையினரும் மாவட்ட குழந்தை நல ஆலோசகரும் அருள்ஜோதியிடம் விசாரணை நடத்தி, மேலதிக விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
 
அருள்ஜோதி குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி
 காட்சிகளை ஆய்வு செய்த பிறகே இத்தகவலின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
24 நாட்களுக்கும் மேலாக எவ்விதத் துப்பும் கிடைக்காத நிலையில், இந்த தகவல் செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளுக்காக  
P ஜெகதீசன் மாவட்ட ஒளிப்பதிவாளர் தமிழக குரல் கடலூர் மாவட்டம் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad