திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் பாலாம்பாள் ஐடிஐ வளாகத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் நேற்று மாலை பட்டிமன்றம் நடைபெற்றது. மனிதனை நல்வழிப்படுத்துவது புத்தகமா..! சமூக ஊடகமா..! என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்திற்கு பட்டதாரி ஆசிரியர் ஆர்.எஸ்.சிவக்குமார் நடுவராக பங்கேற்றார். புத்தகமே..! என்ற அணியில் மனநல ஆலோசகர் டாக்டர் இரா.பாஸ்கரன், செல்வி ஸ்ரீவித்யா, நல்நூலகர் ஜா.தமீம் ஆகியோர் பங்கேற்று பேசினர். சமூக ஊடகமே..! என்ற அணியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன், செல்வன்.அர்பாத், வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினர் ஆ.முரளி ஆகியோர் பங்கேற்று பேசினர். இறுதியில் மனிதனை நல்வழிப்படுத்துவது 'புத்தகமே' என்று நடுவர் தீர்ப்பு வழங்கினார். இந்த பட்டிமன்றத்தை சமூக ஆர்வலர் மலர் சாதிக் தொடங்கி வைத்தார். நிகழ்வில் தலைமை ஆசிரியர் க.வாசு, கவிஞர் தமிழ்ராசா, பூங்குயில் சிவக்குமார், கோல்டு லீப் எக்ஸ்னோரா செயலாளர் எம்.பி.வெங்கடேசன், முதுகலை ஆசிரியர் ம.சுரேஷ் பாபு, கலைஞர் முத்தமிழ் சங்க தலைவர் வந்தை குமரன், அறம் பதிப்பகம் அமரேசன், வீனஸ் வித்யாலயா ரமேஷ் கண்ணா, சமூக ஆர்வலர் மனோஜ் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். நிகழ்வை வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்க தகவல் தொடர்பாளர் கேப்டன் பிரபாகரன் தொகுத்து வழங்கினார்.
கோ.பாபு
திருவண்ணாமலை
மாவட்ட செய்தியாளர்
9843780102
வி.ஜெகன்
திருவண்ணாமலை மாவட்டம் ஒளிப்பதிவாளர்
9894381487
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக