கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட ஐய்யன் ஏரி அருகே பொதுவெளியில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது
வடலூர் நகரப் பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அனைத்தும் ஐய்யன் ஏரிக்கு அருகே சுடுகாட்டிற்கு செல்லும் பாதை ஒட்டியுள்ள சாலையோரத்தில் கொட்டப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்றும் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது
மேலும் வடலூர் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளும் இத்துடன் சேர்த்து கொட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது
வடலூரை மது மாமிசம் இல்லாத புனித நகரமாக அறிவிக்க கோரி தொடர்ந்து சன்மார்க்க அன்பர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில்
நகரப் பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளின் கழிவுகள் அனைத்தும் பொது வெளியில் கொட்டப்படுவதால் அருகே உள்ள விலை நிலங்கள் பாதிக்கப்படுவதோடு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் மேலும் இறைச்சி கழிவுகள் அழுகிய நிலையில் உள்ளதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது அவ்வழியே பயணிக்கும் பொதுமக்கள் மூக்கை மூடியவாறு சென்று வருகின்றனர்
இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை வடலூர் நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் எனவும் இறைச்சி கழிவுகளால்
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முறையாக அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக