தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மறை மாவட்டம் திருச்செந்தூர் ஜீவா நகர் உதவி பங்கு பரமன்குறிச்சி சிங்கராயர்புரத்தில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்தில் பங்கு தந்தை ரோஷன் அடிகளார் தலைமையில் சமத்துவம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதில் விவிலிய போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பங்குத்தந்தை ரோஷன் அடிகளார் பாராட்டி பரிசு வழங்கினார். இதனைத் தொடர்ந்து சமத்துவ தீபாவளியை கொண்டாடும் விதமாக ஊர் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் குழந்தைகள் முன்னிலையில் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதில் ஊர் நல கமிட்டியினர் மற்றும் ஏராளமான பங்கு இறை மக்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக மதி.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக